தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
விசாகப்பட்டினம் நகரம் மற்றும் கடலோர வழித்தடம் அருகிலுள்ள பகுதிகளில் நெட்வொர்க் தரம் குறித்து ட்ராய் ஆய்வு
Posted On:
31 JUL 2025 12:37PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய், ஆந்திரப் பிரதேசத்தின் சேவை உரிமம் பெற்ற பகுதிகளில் மேற்கொண்ட தனிப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2025 ஜூன் மாதத்தில் விசாகப்பட்டினம் மற்றும் கடலோர வழித்தட நகர பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள ட்ராய் மண்டல அலுவலக மேற்பார்வையின் கீழ், நகர்ப்புற மண்டலங்கள், ஹாட்ஸ்பாட்கள், கடலோர மற்றும் கிராமப்புற குடியிருப்புப் பகுதிகள் போன்ற பல்வேறு பயன்பாட்டு பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டது.
2025 ஜூன் 10 முதல் 2025 ஜூன் 13 வரை, ட்ராய் குழுக்கள் 342.9 கிமீ தூரம் நகர பகுதிகளிலும், 3.6 கிமீ நடைபயிற்சி சோதனை முறையிலும், 19 கிமீ தூரம் கடலோர வழித்தடத்திலும் இயக்கி சோதனை செய்யப்பட்டதுடன் 8 ஹாட்ஸ்பாட் இடங்களிலும் விரிவான சோதனைகளை மேற்கொள்ளப்பட்டன. 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பம் குறித்து இந்த ஆய்வின்போது மதிப்பிடப்பட்டது. இது பல கைபேசி பயனர்களின் சேவை அனுபவத்தை எடுத்துரைத்தது.
விசாகப்பட்டினம் நகரத்தில் ஒட்டுமொத்த மொபைல் நெட்வொர்க் செயல்திறன் கீழே வழங்கப்பட்டுள்ளது:
(5ஜி/4ஜி/3ஜி/2ஜி) தானியங்கி தேர்வு முறையில் அழைப்பு வெற்றி விகிதம் ஏர்டெல்-லில் 99.15%-ஆகவும், பிஎஸ்என்எல்-லில் 95.55%-ஆகவும், ஆர்ஜேஐஎல்-லில் 99.83%-ஆகவும் மற்றும் விஐஎல்-லில் 96.83%-ஆகவும் உள்ளது.
(5ஜி/4ஜி/3ஜி/2ஜி) தானியங்கி பயன்பாட்டு முறையில் கால் டிராப் விகிதம் – ஏர்டெல்-லில் 0.00%-ஆகவும், பிஎஸ்என்எல்-லில் 4.66%-ஆகவும், ஆர்ஜேஐஎல்-லில் 0.00%-ஆகவும் மற்றும் விஐஎல்-லில் 0.34%-ஆகவும் உள்ளது.
5G தரவு சேவைகள்: அதிகபட்ச சராசரி பதிவிறக்க செயல்திறன் 204.91 எம்பீபிஎஸ்-ஆகவும், பதிவேற்ற செயல்திறன் எம்பீபிஎஸ்-ஆகவும் உள்ளது.
விசாகப்பட்டினம் நகரில், புரானா மார்க்கெட், போர்ட் மெயின் ரோடு, ஜெயில் ரோடு, சிரிபுரம் சந்திப்பு, எம்விபி காலனி, பெடவால்டேர், சைனாவால்டேர், மத்திலபாலம், கைலாஷ் கிரி, விசாகக் காட்சி முனை, சாகர் நகர் பீச், ருஷிகொண்டா பீச், ஐடி பார்க் பீச், பீச் ரோடு, பஹீமுனிபட்டினம், ஆகிய பகுதிகளில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. குர்ரம்பாளையம், ராம்புரம், சுரெட்டிவானிபாளையம், பரவாடா, யென்டாடா, மதுர வாடா, பெண்டுர்த்தி, சிம்ஹாசலம், கஜுவாகா, ஸ்டீல் பிளாண்ட், என்டிபிசி, என்ஏடி சந்திப்பு, விமான நிலையம், கடற்படை கப்பல்துறை சாலை போன்ற பகுதிகளில் ட்ராய் மதிப்பாய்வு செய்தது.
ட்ராய் பரிந்துரைத்த உபகரணங்கள் மற்றும் நிகழ்நேர சூழல்களில் தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகளைப் பயன்படுத்தி சோதனைகள் நடத்தப்பட்டன. விரிவான அறிக்கை ட்ராய் வலைத்தளமான www.trai.gov.in இல் கிடைக்கிறது. ஏதேனும் தெளிவுபடுத்தல்/தகவலுக்கு, (ஆலோசகர் மண்டல அலுவலகம், ஹைதராபாத்) திரு பி. பிரவீன் குமார்-ஐ adv.hyderabad@trai.gov.in என்ற மின்னஞ்சல் மூலமும் அல்லது தொலைபேசி எண்: +91-40-23000761 மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
****
(Release ID: 2150572)
AD/GK/SG/KR
(Release ID: 2150654)