பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மக்களவை, மாநிலங்களவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது- மத்திய இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர்
Posted On:
30 JUL 2025 4:49PM by PIB Chennai
உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் தலைமைத்துவ பங்களிப்புகளில் மகளிர் பெருமளவு பங்கேற்பதற்கு அரசு ஊக்கம் அளித்து வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
1957-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மகளிரின் எண்ணிக்கை 3 சதவீதமாக இருந்த நிலையில், 2024-ம் ஆண்டு தேர்தலில் அதன் எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரித்தது. முதலாவது மக்களவைத் தேர்தலில் 22 மகளிரும் 2-வது மக்களவைத் தேர்தலில் 27 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 17-வது மக்களவைத் தேர்தலில் 78 பேரும், 18-வது மக்களவைத் தேர்தலில் 75 பேரும் (மொத்த உறுப்பினர்களில் சுமார் 14%) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநிலங்களவையில் 1952-ம் ஆண்டு 15 மகளிர் உறுப்பினர்கள் இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த உறுப்பினர்களில் சுமார் 17 சதவீதமாகும். மேலும், பஞ்சாயத்து அமைப்புகளில், சுமார் 14.5 லட்சம் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது மொத்த உறுப்பினர்களில் 46 சதவீதமாகும்.
நாட்டில் 21 மாநிலங்களில் பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் மாநிலங்களவையில் இன்று (30.07.2025) தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2150216
***
AD/IR/KPG/KR/DL
(Release ID: 2150403)