மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் ரூ.124.21 கோடி செலவில் 2 மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க ஒப்புதல்
Posted On:
30 JUL 2025 2:54PM by PIB Chennai
2020-21 நிதியாண்டு முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் ரூ.20,050 கோடி முதலீட்டில் பிரதமரின் மீன்வளத் திட்டத்தை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தி மீன்வளத் துறையின் நிலையான, பொறுப்பான வளர்ச்சி மற்றும் மீனவர்களின் நலன் மூலம் நீலப் புரட்சியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கும் மையங்கள், மொத்த விற்பனை மீன் சந்தைகள் போன்ற மீன்வள உள்கட்டமைப்பை மேம்படுத்துவது பிரதமரின் மீன்வளத் திட்டத்தால் ஆதரிக்கப்படும் முக்கியமான துறைகளாகும். இத்திட்டத்தின் கீழ் 26 மீன்பிடி துறைமுகங்கள், 22 மீன் இறங்கும் மையங்கள் மற்றும் 21 மொத்த விற்பனை மீன் சந்தைகளை மேம்படுத்துதல்/நவீனமாக்குதல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் ரூ.124.21 கோடி செலவில் 2 மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் பங்கு ரூ. 113.71 கோடி இதில் ரூ. 55.75 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரூ. 26.42 கோடி செலவில் 4 மீன் இறங்கும் மையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் பங்கு ரூ. 15.85 கோடி இதில் ரூ.3.97 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 173.33 கோடி செலவில் 2 மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் பங்கு ரூ. 173.33 கோடி இதில் ரூ. 13.34 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரூ. 39.08 கோடி செலவில் 2 மீன் இறங்கும் மையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் பங்கு ரூ. 39.08 கோடி இதில் ரூ.9.76 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டில், இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.60,523.89 கோடி மதிப்புள்ள 17,81,602 மெட்ரிக் டன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தத் தகவலை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் 2025 ஜூலை 30 அன்று மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2150100
******
AD/SMB/DL
(Release ID: 2150402)