ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
உர நிறுவனங்களால் 7 நானோ யூரியா ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன – ஆண்டு உற்பத்தி திறன் 27.22 கோடி பாட்டில்கள்
Posted On:
29 JUL 2025 5:04PM by PIB Chennai
நாடு முழுவதும் நானோ உர ஆலைகளை அமைப்பதில் மத்திய அரசு நேரடியாக ஈடுபடவில்லை. உர நிறுவனங்களால் மொத்தம் 7 நானோ யூரியா ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது செயல்பாட்டில் உள்ள இந்த அனைத்து நானோ யூரியா ஆலைகளின் மொத்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 27.22 கோடி பாட்டில்கள் ஆகும். ஒவ்வொரு பாட்டிலும் 500 மில்லி கொண்டதாகும்.
உர நிறுவனங்களால் 3 நானோ டிஏபி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது செயல்பாட்டில் உள்ள இந்த அனைத்து நானோ டிஏபி ஆலைகளின் மொத்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 7.64 கோடி பாட்டில்கள் ஆகும்.
நாடு முழுவதும் நானோ உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
விழிப்புணர்வு முகாம்கள், கருத்தரங்கங்கள், கள அளவிலான விளக்கங்கள், விவசாயிகள் சம்மேளனங்கள், பிராந்திய மொழிகளில் விளம்பர படங்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மூலம் நானோ யூரியாவின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.
இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149781
***
AD/SM/PLM/RJ/K/DL
(Release ID: 2149890)