சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாவட்ட அளவிலான சுகாதார அமைப்பை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
Posted On:
29 JUL 2025 3:53PM by PIB Chennai
2021–26 நிதியாண்டில் ரூ.64,180 கோடி செலவில் பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது
பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ், 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் 602 தீவிர சிகிச்சை மருத்துவமனை தொகுதிகள் நிறுவப்பட உள்ளன
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திட்ட அமலாக்க அமைப்பின் (PIPs) வடிவில் பெறப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை வலுப்படுத்துவது உட்பட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவை வழங்குகிறது. பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கிடைக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ள வளங்களின் அடிப்படையில், இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது.
இந்திய அரசு தேசிய தரநிலைகளை uறுதி செய்வதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இது பொது சுகாதார வசதிகளில் வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தரத்தை உறுதி செய்வதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சேவை வழங்குதல், நோயாளியின் உரிமைகள், உள்ளீடுகள், தொடர்புடைய சேவைகள், மருத்துவ பராமரிப்பு, தொற்றுக் கட்டுப்பாடு, தர மேலாண்மை போன்ற துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பொது சுகாதார வசதிகளில் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான கட்டமைப்பை இது வழங்குகிறது. இது நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்கிறது மற்றும் சுகாதார சேவைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது.
பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் ஐந்து ஆண்டுகளில் (நிதியாண்டு 2021–26) ரூ.64,180 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய மற்றும் எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் பேரழிவுகளை திறம்பட எதிர்கொள்வதை உறுதி செய்வதற்காக, முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு என அனைத்து நிலைகளிலும் உள்ள சுகாதார அமைப்புகளின் திறன்களை வலுப்படுத்துவதில் இந்த இயக்கம் கவனம் செலுத்துகிறது.
பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் மத்திய நிதியுதவி திட்டத்தின் கூறுகளின் கீழ், 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அனைத்து மாவட்டங்களிலும், 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரையிலான திட்டக் காலத்தில், அதி தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உட்பட, 50/100 படுக்கைகள் கொண்ட 602 தீவிர சிகிச்சை மருத்துவமனை தொகுதிகளை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2149690)
AD/SM/DL
(Release ID: 2149888)