சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுப்பிக்கப்படும் ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா அட்டைகள்

Posted On: 29 JUL 2025 3:55PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதியோருக்கான வய வந்தனா சுகாதார அட்டைகள் வைத்திருப்போர் இடம் பெயர்தல் திறன் என்ற அம்சத்தின் கீழ், பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள 31,466 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்

ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் இணைவதற்கான விரிவான மருத்துவமனை இணைப்பு மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்களை தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டது.

ஆயுஷ்மான் வய வந்தனா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 1.06 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ சேவை கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு அக்டோபர் 29, 2024 அன்று, ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி, அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களையும் உள்ளடக்கியது. இந்த முயற்சியின் கீழ், பயனாளிகள் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைகள் மூலம் ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை சலுகைகளைப் பெறுவார்கள்.

கூடுதலாக, - ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின்  இடம் பெயர்தல் திறன் அம்சம், தகுதியான பயனாளிகள் – வய வந்தனா திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் உட்பட - நாடு முழுவதும் உள்ள 31,466 பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் எதிலும், அவர்கள் வசிக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல், சுகாதார சேவைகளை அணுக அனுமதிக்கிறது. இது நாடு முழுவதும் உள்ள முதியோர்களுக்கு தரமான சுகாதாரப் பராமரிப்பை தடையற்ற முறையிலும் மற்றும் சமமான வகையிலும் அணுகலை உறுதி செய்கிறது.

வய வந்தனா அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட 14,194 தனியார் சுகாதார சேவை வழங்கும் மையங்களின் பரந்த வலையமைப்பு மூலம் சிகிச்சையைப் பெறலாம். சேவை வழங்கலில் தரம் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, தேசிய சுகாதார ஆணையம் ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகள் இணைவதற்கான விரிவான மருத்துவமனை இணைப்பு மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஆயுஷ்மான் வய வந்தனா திட்டத்தின் கீழ் 1.06 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவ சேவை கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149693

***

AD/SM/DL


(Release ID: 2149886)