கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரயில் சாலைப்போக்குவரத்து இணைப்பு
प्रविष्टि तिथि:
29 JUL 2025 1:39PM by PIB Chennai
சாகர்மாலா திட்டத்தின் கீழ், 272 சாலை மற்றும் ரயில் இணைப்பு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை சாலைப் போக்குவரத்து அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், முக்கிய துறைமுகங்கள் உள்ளிட்டவற்றால் செயல்படுத்தப்படுகின்றன. 272 திட்டங்களில், 74 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 67 திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. 131 திட்டங்களுக்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாகர்மாலா திட்டத்தில் கொள்கை வழிகாட்டுதல் மற்றும் உயர் மட்ட ஒருங்கிணைப்புக்காக தேசிய அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகள் போன்ற பல்வேறு தரப்பினரிடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்காக கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அவ்வப்போது கடல்சார் மேம்பாட்டு கவுன்சில் கூட்டங்களை நடத்துகிறது.
சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.5.79 லட்சம் கோடி மதிப்பீட்டில் 839 திட்டங்களை செயல்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில், ரூ.2.42 லட்சம் கோடி மொத்த திட்ட செலவில் 119 திட்டங்கள் பொது-தனியார் கூட்டு முறையில் செயல்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள திட்டங்கள் நேரடி அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகவலை மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149635
***
AD/SM/PLM/RJ/KR
(रिलीज़ आईडी: 2149687)
आगंतुक पटल : 14