பாதுகாப்பு அமைச்சகம்
தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தில் இயந்திரங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் துறையில் சோதனை வசதியை அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது
Posted On:
28 JUL 2025 5:42PM by PIB Chennai
திருச்சிராப்பள்ளியில் உள்ள இயந்திரங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் துறையில் அதிநவீன சோதனை வசதியை நிறுவுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் ஜூலை 28, 2025 அன்று புது தில்லியில் கையெழுத்திட்டது. பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழக லிமிடெட் (TIDCO) மூத்த அதிகாரிகள் இடையே, பாதுகாப்பு அமைச்சக பாதுகாப்பு உற்பத்தி செயலாளர் திரு சஞ்சீவ் குமார் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.
பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 75% வரை நிதியை அரசு 'உதவி மானியமாக' வழங்குகிறது, மீதமுள்ள 25% இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில/மத்திய அரசுகளை உள்ளடக்கிய சிறப்பு நோக்க திட்டம் (SPV) மூலம் நிதியளிக்கப்படுகிறது.
இயந்திரங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் துறையில் சோதனை வசதிக்காக, தனியார் நிறுவனமான மைக்ரோ லேப்ஸ், முன்னணி சிறப்பு நோக்க திட்ட உறுப்பினராக உள்ளது. சிறப்பு நோக்க திட்டக் கூட்டமைப்பின் மற்ற உறுப்பினர்களாக தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் லிமிடெட், பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் வைத்தீஸ்வரன் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை விளங்குன்றன. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு மேம்பட்ட சோதனை உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்கும். இதனால் பாதுகாப்பில் 'இந்தியாவின் தற்சார்பு' திறனுக்கு ஊக்கம் கிடைக்கும்.
தனியார் தொழில்துறை மற்றும் மத்திய/மாநில அரசுடன் இணைந்து அதிநவீன சோதனை வசதிகளை அமைப்பதற்காக, 400 கோடி ரூபாய் செலவில், பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்பு திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி மூலம் மற்றும் இராணுவ உபகரணங்களின் இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் இந்தியாவின் தற்சார்பு திறனை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளுக்கு உத்வேகம் அளிக்க பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களுக்கு தமிழ்நாட்டில் நான்கும் உத்தரபிரதேசத்தில் மூன்றுமாக, ஏழு சோதனை வசதிகள் அங்கீகரிக்கப்பட்டன.
***
(Release ID: 2149370)
AD/SM/DL
(Release ID: 2149519)
Visitor Counter : 3