நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது: மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி

Posted On: 28 JUL 2025 12:48PM by PIB Chennai

நாட்டில் 2024-25-ம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி ஏற்கனவே 1 பில்லியன் டன்களை கடந்துள்ளது. மேலும் 2026-27-ம் ஆண்டுக்குள் இந்திய நிலக்கரி நிறுவனம் 1 பில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலக்கரியின் பெரும்பாலான தேவை உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. உள்நாட்டு ஆதாரங்கள் மூலம் நிலக்கரிக்கான எதிர்கால தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், அத்தியாவசியமற்ற நிலக்கரி இறக்குமதியைக் குறைப்பதற்கும், உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் 6-7% அதிகரித்து 2029-30-ம் ஆண்டுக்குள் சுமார் 1.5 பில்லியன் டன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024-2025-ம் ஆண்டில் அகில இந்திய அளவில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 1047.67 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2023-2024-ம் ஆண்டில் 997.83 மில்லியன் டன்னாக இருந்தது, இது சுமார் 4.99% வளர்ச்சியாகும். 2024-25-ம் ஆண்டில், இந்திய நிலக்கரி நிறுவனம் 781.07 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்தது. இது அதன் முந்தைய ஆண்டில் 773.81 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், தற்போது 0.94% அளவிற்கு அதிக உற்பத்தியை கண்டுள்ளது.

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், நாட்டில் அத்தியாவசியமற்ற நிலக்கரி இறக்குமதியை தவிர்க்கவும் அரசுல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒற்றைச் சாளர அனுமதி, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ல் திருத்தம் செய்துள்ளது. உற்பத்தி, பெருமளவிலான உற்பத்தி தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், புதிய திட்டங்கள், ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கம் மற்றும் வணிகச் சுரங்கத்திற்காக தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிலக்கரித் தொகுதிகளை ஏலம் விடுதல் ஆகியவை சில முக்கிய முயற்சிகளில் அடங்கும். வணிகச் சுரங்கத்திற்கும் நூறு சதவீதம்  அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149193

***

AD/IR/RJ/KR


(Release ID: 2149227)
Read this release in: English , Urdu , Hindi