கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மேம்பாடு

प्रविष्टि तिथि: 25 JUL 2025 1:30PM by PIB Chennai

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து  மேம்பாட்டின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. துணைப் போக்குவரத்து முறையை உருவாக்குதல், தளவாடச் செலவைக் குறைத்தல், நதி பயண சுற்றுலாவை அதிகரித்தல் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வேலைவாய்ப்பு உருவாக்கம், சிறந்த சேமிப்பு மற்றும் போக்குவரத்து மூலம் உள்ளூர் எம்எஸ்எம்இ-க்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு, நகர சாலை நெரிசலைக் குறைத்தல் உள்ளிட்ட ஏராளமான நன்மைகளை இத்திட்டங்கள் வழங்குகின்றன.

இந்தத் தகவலை மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு  சர்பானந்த சோனோவால் மக்களவையில் இன்று (25.07.2025) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விரிவான விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148286

***

AD/PKV/SG/KR

 


(रिलीज़ आईडी: 2148398) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी