கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பீகாரில் ரூ.5.61 கோடி செலவில் 4 புதிய படகுத் துறைகள் அமைப்பு

Posted On: 25 JUL 2025 1:27PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் 5.61 கோடி ரூபாய் செலவில் 4 படகுத் துறைகளை அமைத்துள்ளது. பீகார் மாநிலம் கால்கோவான் & டின்டங்கா ஆகிய இரண்டு படகுத் துறைகள், பஹல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான் கஞ்ச் பகுதியில் இரண்டு படகுத் துறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக இந்தப் பகுதிகளில் 2.80 கோடி ரூபாய் செலவில் படகுப் போக்குவரத்திற்கான வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று (25.07.2025) கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இதனைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2148281)

AD/SV/AG/KR


(Release ID: 2148375)
Read this release in: English , Urdu , Hindi