ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 1,25,463 நெசவாளர்கள் பயனடைந்துள்ளனர்

Posted On: 25 JUL 2025 1:53PM by PIB Chennai

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம், கிராமப்புறங்கள் உட்பட நாடு முழுவதும் கைத்தறி மற்றும் கைவினைத் துறைகளின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தி வரும் திட்டங்களால், கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில், 1,25,463 நெசவாளர்களும், 13,806 கைவினைக் கலைஞர்களும் பயனடைந்துள்ளனர்.

இந்தத் தகவலை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இன்று (25.07.2025) மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

 தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், மூலப்பொருள் விநியோகத் திட்டம்,  விரிவான கைவினைப் பொருட்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ், மூலப்பொருட்கள், தறிகள், துணைக்கருவிகள் மற்றும் கருவித்தொகுப்புகளை வாங்குதல், வடிவமைப்பு புதுமை, தயாரிப்பு பல்வகைப்படுத்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துதல், சலுகை விலையில் கடன்கள் போன்றவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்தத் துறைகளில் ஜவுளி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களில், மாநில/யூனியன் பிரதேச வாரியாக பட்ஜெட் ஒதுக்கப்படுவதில்லை. அந்தந்தத் திட்டங்களின் தற்போதைய வழிகாட்டுதல்களின்படி சாத்தியமான திட்டங்கள் கிடைத்தவுடன், தகுதியான கைத்தறி நிறுவனங்களுக்கு பல்வேறு தலையீடுகளுக்கு நிதி வெளியிடப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டங்களின் கீழ், நாடு முழுவதும் மொத்தம் 6,44,895 நெசவாளர்களும், 5,10,320 கைவினைக் கலைஞர்களும் பயனடைந்துள்ளனர். இவர்களில் பெண் நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களும் அடங்குவர்.

பழங்குடி சமூகங்களை ஊக்குவிப்பதற்காக, ஜவுளி அமைச்சகம் அவர்களின் வணிகத்தை நிலைநிறுத்தவும் அதிகரிக்கவும் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள பழங்குடி நெசவாளர்கள்/கைவினைஞர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பு: கைத்தறி நெசவாளர் மக்கள் தொகையில் 71% பேர் மற்றும் கைவினைஞர் மக்கள் தொகையில் 64% பேர் பெண்கள், எனவே அதிகபட்ச சலுகைகள் பெண் நெசவாளர்கள்/கைவினைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன.

***

(Release ID: 2148297)

AD/PKV/SG/KR


(Release ID: 2148372)
Read this release in: English , Urdu , Hindi