சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேளிக்கை அம்சங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை தரப்படுத்தல்

Posted On: 24 JUL 2025 4:57PM by PIB Chennai

இந்தியா முழுவதும் சாகச சுற்றுலாத் துறையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு விரிவான மற்றும் தரப்படுத்தப்பட்ட கட்டமைப்பை நிறுவும் நோக்கத்துடன், இந்திய சாகச சுற்றுலா அமைப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து சுற்றுலா அமைச்சகம் சாகச பாதுகாப்பு மாதிரி வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கும் உருவாக்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

சாகச கேளிக்கைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கடுமையாகக் கண்காணிக்கவும், அனைத்து அமைப்பாளர்களும் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் உரிம விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

சாகச கேளிக்கை சுற்றுலா உட்பட சுற்றுலா தலங்கள் மற்றும் விளையாட்டு அம்சங்களின் மேம்பாடு மற்றும் அபிவிருத்தி அந்தந்த மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் விருப்பங்களை அமைச்சகம் நிறைவு செய்கிறது.

சுற்றுலா அமைச்சகம், 'ஸ்வதேஷ் தரிசனம்', ' புத்துணர்ச்சி மற்றும் ஆன்மீக யாத்திரை, பாரம்பரிய மேம்பாட்டு இயக்கம் (பிரசாத்)' மற்றும் 'சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான மத்திய நிறுவனங்களுக்கான உதவி' போன்ற மத்திய துறைத் திட்டங்களின் மூலம், சாகச சுற்றுலா உட்பட, நாட்டின் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. மேம்பாட்டிற்காக அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்கள்/மத்திய நிறுவனங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு, அவை திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல், தொடர்புடைய திட்ட வழிகாட்டுதல்களை அவர்கள் பின்பற்றுதல் மற்றும் பொருத்தமான விரிவான திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்தல் ஆகியவற்றுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன.

மேற்கண்ட திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட முன் முயற்சிகள் அந்தந்த மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களால் செயல்படுத்தப்படுகின்றன. சுற்றுலா அமைச்சகம் திட்டங்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து, அந்தந்த மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்கள் அவற்றை காலக்கெடுவிற்குள் முடிக்க ஊக்குவிக்கிறது. திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்து விரைவுபடுத்தவும், மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு வழிகாட்டவும், சுற்றுலா அமைச்சகம் மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழு மற்றும் திட்ட இயக்குநரகக் கூட்டங்கள் உட்பட பல்வேறு நிலைகளில் வழக்கமான மதிப்பாய்வுக் கூட்டங்களை நடத்துகிறது.

இந்தத் தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147791

***

AD/SM/DL


(Release ID: 2147963)
Read this release in: English , Urdu , Hindi