சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு

Posted On: 24 JUL 2025 3:53PM by PIB Chennai

கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை  மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன்படி வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் வகையில், நாட்டில் உள்ள கடலோர மாநிலங்கள் மற்றும் தீவுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

இச்சட்டத்தின்படி, கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடுவதற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கடற்பகுதிகள் மற்றும் தீவுகளில் நுழைவதற்கும் தேடுதல்நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களை கைது செய்யவும், இந்திய கடலோரக் காவல் படைக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தேவையான திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.

கடல் ஆமைகள் மற்றும் அதன் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் நோக்கில் தேசிய கடல்சார் ஆமைகள் பாதுகாப்பு செயல்திட்டத்தை சுற்றுச்சூழல் அமைச்சகம் வடிவமைத்துள்ளது.

அலையாத்திக் காடுகள், கடல் புற்கள், மணல் திட்டுகள், பவளப்பாறைகள், கடல் ஆமை மற்றும் நண்டுகளின் வாழ்விடங்கள் போன்ற சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான  இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147741  

***

AD/SV/KPG/KR/DL


(Release ID: 2147923)
Read this release in: English , Urdu , Hindi