அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சிகிச்சையும் கட்டமைப்பு மேம்பாடும்
Posted On:
24 JUL 2025 3:54PM by PIB Chennai
ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சிகிச்சையும் கட்டமைப்பு மேம்பாடும் பற்றிய எழுத்துபூர்வமான கேள்விக்கு பதிலளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்க இந்த நிறுவனத்திற்கு 2023-24ம் நிதியாண்டில் 40 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிறுவனத்தில் பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்ட வளாகத்தை கட்ட மத்திய பொதுப்பணி துறைக்கு 2023-24 நிதியாண்டில் 40.29 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சமூக பொருளாதார அடிப்படையில் நான்கு பிரிவுகளில் பொதுமக்கள் வரிசைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட 11955 பேரில் 6853 பேர் மிகவும் குறைந்த வருவாய் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இந்த மருத்துவமனையில் 2024ம் ஆண்டு 4260 உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் இம்மருத்துவமனையில் புதிய வெளி நோயாளிகள் 17196 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மிகவும் குறைந்த வருவாய் பிரிவை சேர்ந்தவர்கள் 11223 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்திற்கு 20223-24 நிதியாண்டில் பொது நிதியாக 120 கோடி ரூபாயும் மூலதன நிதியாக 45 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம் தொழிலாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147742
***
AD/SM/KR
(Release ID: 2147825)