எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு இறக்குமதி தொடர்பான விவகாரங்கள் குறித்த விவாதம்

प्रविष्टि तिथि: 24 JUL 2025 1:52PM by PIB Chennai

எஃகு இறக்குமதிக்கான கண்காணிப்பு முறைகள், தரக்கட்டுப்பாடு ஆட்சேபனை இல்லாத  சான்றிதழ் பெறுவது போன்றவை தொடர்பான விவகாரங்கள் குறித்து வெளிப்படையான விவாதம் இம்மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் உள்ள உத்யோக் பவனில் நடைபெறும் என்று மத்திய எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இது தொடர்பான தங்களது பிரச்சனைகள் குறித்து தெரிவிக்கலாம் என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது. இந்த விவாதத்தில் பங்கேற்பதற்கு tech-steel[at]nic[dot]in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களைக் குறிப்பிட்டு மேற்கண்ட தேதிகளில் விவாதத்திற்கான நேரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு அந்த அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இடவசதி கருதி அதிகபட்சமாக 15 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு  மட்டுமே இந்த விவாதத்தில் பங்கேற்பதற்கான நேர ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தொழில்துறை அமைப்புகள் தங்களது உறுப்பினர்கள் பிரச்சனைகள் குறித்த விவரங்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் விவாதிப்பதற்கு ஏதுவாக நேர ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

***

(Release ID: 2147703)

AD/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2147762) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati