உள்துறை அமைச்சகம்
அணுசக்தி உற்பத்தி நிலையங்களில் அவசர கால நடைமுறைகளுக்கான பயிற்சி அளிக்க புதிய அமைப்பு
Posted On:
23 JUL 2025 1:43PM by PIB Chennai
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ், பொதுத் தளத்தில் அணுசக்தி அவசர நிலையின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அனைத்து ஆபத்துகால நடைமுறையின் ஒருங்கிணைந்த மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் ஒரு அங்கமாக உள்ளது. அணுசக்தி மற்றும் கதிரியக்கம் தொடர்பான எந்தவொரு பேரிடர்களை எதிர்கொள்வதில், அணுசக்தித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அதற்கான நெருக்கடி நிலை மேலாண்மைத் திட்டத்தையும் அத்துறை உருவாக்கியுள்ளது.
அணுசக்தி மற்றும் கதிரியக்கம் தொடர்பான அவசரகால நிலைகளின் கீழ், ஆலைகள், பொதுத் தளங்கள் மற்றும் ஆஃப்-சைட் பகுதிகளில் ஏற்படும் அவசரநிலை என்பது மிகவும் விரும்பத்தாகாத விபத்து சூழல் / அவசர நிலை போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. இதில் கதிரியக்க பொருட்கள் / அபாயகரமான இரசாயன உற்பத்தி ஆலைகளிலிருந்து பொதுவெளியில் கசிவது போன்ற இடர்பாடுகளை எதிர்கொள்ளாத தேவையான நடைமுறைகள் அவசியமாகிறது.
ஒவ்வொரு அணுமின் நிலைய தளத்திலும் உள்ள அவசரகால நிலை மற்றும் தள அவசர நிலைக்கு ஏற்ப, அணுமின் நிலையத்தை இயக்குவதற்கான உரிமம் வழங்குவதற்கு அதன் அவசரகால செயல்திட்ட தயார்நிலை மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான திட்டம் ஒரு கட்டாயத் தேவையாகும்.
அணுமின் நிலையங்கள் அமைந்துள்ள அனைத்து தளங்களுக்கும், தேவையான பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள், பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அணுசக்தி நிலையத்துடன் ஒருங்கிணைந்து வடிவமைக்கப்படுகின்றன. அவசரகால நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான தயார் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்காக, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தால் ஆஃப்-சைட் அவசர கால நடைமுறைகளுக்கான பயிற்சிகளை அளிப்பதற்கு ஏதுவாக புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அவசரகால மேலாண்மையின் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், பல்வேறு வகையான பயிற்சி நடைமுறைகள் வடிவமைக்கப்பட்டு முறையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
***
VL/SV/DL
(Release ID: 2147475)