சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக சுமார் 3,400 சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கம்

Posted On: 23 JUL 2025 2:26PM by PIB Chennai

சீர்மரபினருக்கு அதிகாரம் அளித்தலுக்காக அமைச்சகம் ”சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டம் (சீட்)” என்பதை தொடங்கி உள்ளது.

கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், நிலம் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றின் மூலம் சீர்மரபினர் மேம்பாடு அடைய இந்தத் திட்டம் வழி செய்கின்றது. மாணவர்களுக்கு இலவச பயிற்சிக்காக நிதிஉதவி அளிப்பதன் மூலம் அவர்கள் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் முடிகிறது. இந்தச் சமுதாய மக்களுக்கு ஆயுஷ்மான் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கு சீர்மரபினர் வாழும் தொகுப்பிடங்களில் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம் (கிராமம் மற்றும் நகரம்) மற்றும் ஏனைய திட்டங்களின் மூலம் இவர்களுக்கு வீடுகள் வழங்க உதவி செய்யப்படுகிறது.

சீர்மரபினர், நாடோடிகள் மற்றும் பகுதி நாடோடி சமுதாயத்தைச் சேர்ந்த 46,067 உறுப்பினர்களைக் கொண்ட 3,438 சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் சுயஉதவிக் குழுக்களில் சீர்மரபினர் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற தகவலை தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் பராமரிக்கவில்லை.

சீர்மரபினர், நாடோடிகள் மற்றும் பகுதி நாடோடி சமுதாயத்தினரின் மேம்பாடு மற்றும் நல்வாழ்விற்காக அமைச்சகமானது மேம்பாடு மற்றும் நல்வாழ்வு வாரியத்தை உருவாக்கி உள்ளது. இந்த வாரியமானது தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தேசிய பட்டியலின நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் அரசு சாராத தொண்டு நிறுவனங்கள் ஆகியோரை பங்குதாரர் ஏஜென்சிகளாக இணைத்துக்  கொண்டு சீர்மரபினர் சமுதாயத்திற்கு உதவிகள் வழங்கி வருகிறது.

இத்தகவலை சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் திரு. பி.எல்.வர்மா மாநிலங்களவையில் இன்று ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2147213)

VL/TS/KR/DL


(Release ID: 2147468)
Read this release in: English , Urdu , Hindi , Bengali