ஆயுஷ்
இளம் ஆயுர்வேத ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவியல் கட்டுரை எழுதும் பயிலரங்கம் – மத்திய ஆயுர்வேத குழுமம் அறிவிப்பு
Posted On:
23 JUL 2025 12:37PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய ஆயுர்வேத அறிவியல்களுக்கான ஆராய்ச்சிக் குழுமம் தனது முன்முயற்சித் திட்டமான சிசிஆர்ஏஎஸ்-ப்ரயத்னா இரண்டாவது பதிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவியல் எழுதுவது குறித்த பயிலரங்கம் ஆயுர்வேத முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு அறிவியல் கட்டுரைகள் எழுதுதல், கட்டுரைக்கான கையெழுத்துப்படியை உருவாக்குதல், ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுதல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கும்.
மத்திய ஆயுர்வேத அறிவியல்களுக்கான ஆராய்ச்சிக் குழுமத்தின் (சிசிஆர்ஏஎஸ்) தலைமை இயக்குனர் பேராசிரியர் ரபிநாராயண் ஆச்சார்யா இளம் ஆயுர்வேத ஆராய்ச்சியாளர்களை அறிவியல் எழுதும் கலையில் வல்லுனர்களாக ஆக்குவது இன்றியமையாதது என்றார். தங்களது ஆராய்ச்சிகளை இளம் ஆயுர்வேத ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச தர நிலையில் கட்டுரைகளாக வெளியிட ப்ரயத்னா உதவும் என ரபிநாராயண் மேலும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 2024 இல் நடத்தப்பட்ட முதல் பயிலரங்கம் கல்விப்புலம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும் சர்வதேச தரநிலைகளுடன் கட்டுரைகளை வெளியிடுவதற்கும் இடையில் இருந்த இடைவெளியைக் குறைக்க உதவியது. இந்த இரண்டாவது பதிப்பை நடத்துவதற்கான கல்வி நிறுவனங்களை இந்த ஆராய்ச்சிக் குழுமம் தேர்ந்தெடுக்க உள்ளது. ஆர்வமுள்ள ஆயுர்வேத நிறுவனங்கள் விருப்ப ஆவணங்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சிசிஆர்ஏஎஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவின் ஆயுர்வேத ஞானத்தை சர்வதேச அளவில் வெளிக்காட்டும் வகையில் மத்திய ஆயுர்வேத அறிவியல்களுக்கான ஆராய்ச்சிக் குழுமம் மூன்று ஆராய்ச்சி இதழ்களை வெலியிட்டு வருகின்றது. மேலும் ஆராய்ச்சி நெறிமுறைகளைக் கற்றுத் தருவதற்காக ஸ்பார்க், பிஜி-ஸ்டார், அக்னி மற்றும் ஸ்மார்ட் போன்ற சிறப்பு திட்டங்களையும் இந்தக் குழுமம் நடத்தி வருகின்றது.
***
(Release ID: 2147149)
VL/TS/KPG/KR
(Release ID: 2147357)