சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முக்கியமான தொற்றுநோய்களை ஒழிப்பதிலும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் இந்தியா அடைந்துள்ள சாதனைகளின் அண்மைத் தகவல்கள்

Posted On: 22 JUL 2025 4:06PM by PIB Chennai

முக்கியமான தொற்றுநோய்களை ஒழிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் இந்திய அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை அடைந்துள்ளது. அதில் முக்கியமான சில மைல்கற்கள் கீழே தரப்படுகின்றன:

•     2015ல் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 237ஆக இருந்த காசநோய் பாதிப்பு 2023ல் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 195ஆக குறைந்துள்ளது. அதாவது காசநோய் பாதிப்பு 17.7% குறைந்துள்ளது. இதேபோன்று காசநோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 21.4% குறைந்துள்ளது. அதாவது 2015ல் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 28ஆக இருந்த மரணங்கள் 2023ல் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 22ஆக குறைந்துள்ளது.

•     2015க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நாட்டில் மலேரியா நோய்பாதிப்பு 78.1% குறைந்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 77.6% குறைந்துள்ளது.

•     10,000 நபர்களுக்கு ஒருவருக்கும் குறைவான அளவில் பாதிப்பு என்ற கலா-அசார் நோய் ஒழிப்பிற்கான இலக்கு 54 மாவட்டங்களில் 633 வட்டாரங்களில் அடையப்பட்டுள்ளது. இது 2030 நீடித்த வளர்ச்சிக்கான குறிக்கோள் இலக்கை மிஞ்சியதாக உள்ளது.

•     யானைக்கால் நோயைப் பொறுத்தவரை இறப்பு விகிதம் 2014ல் 17.6%ஆக இருந்தது 2024ல் 7.1%ஆக குறைந்துள்ளது.

•     டெங்குவைப் பொறுத்து இறப்பு விகிதம் 2008ல் இருந்து 1%க்கும் குறைவாகவே உள்ளது (2024ல் 0.13%).

•     தாயிடம் இருந்து குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்றுவது 84% குறைந்துள்ளது, 2010க்கும் 2024க்கும் இடையில் பரவல் விகிதம் 74.5% குறைந்துள்ளது, சர்வதேச அளவான 56.5% குறைப்போடு ஒப்பிட இது அதிகமாகும்.

இத்தகவலை சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர். திருமதி அனுப்பிரியா பட்டேல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

***

AD/TS/DL


(Release ID: 2146988)
Read this release in: English , Urdu , Hindi , Marathi