புவி அறிவியல் அமைச்சகம்
வட மாநிலங்களில் குளிர்காலங்களில் ஏற்படும் கடும் பனிப்பொழிவு குறித்த ஆய்வுகள்
Posted On:
22 JUL 2025 1:55PM by PIB Chennai
வட மாநிலங்களில் குளிர்காலத்தில் ஏற்படும் கடும் பனிப்பொழிவால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பாதுகாப்பான விமான சேவை குறித்து கடந்த பத்தாண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகள் குறிப்பிடத்தக்க வகையில் நிறைவடைந்துள்ளது. புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு குளிர்காலத்தில் இந்த ஆய்வுகள் தொடங்கப்பட்டன.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் தலைமையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் நடுத்தர வானிலை ஆய்வக தேசிய மையத்தின் உதவியுடன் குளிர்காலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு குறித்து திறந்த வெளியில் நீண்டகால ஆய்வு இதுவாகும். குறிப்பாக குளிர்காலத்தில் விமானம், ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்தில் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளுக்கான காரணிகளை கண்டறியும் வகையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146721
***
AD/SV/RJ/KR
(Release ID: 2146842)