கலாசாரத்துறை அமைச்சகம்
கீழடி அகழாய்வு குறித்த திருத்தப்பட்ட அறிக்கை ஏதும் கோரப்படவில்லை : மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
Posted On:
21 JUL 2025 4:50PM by PIB Chennai
கீழடி அகழாய்வு குறித்த திருத்தப்பட்ட அறிக்கை எதையும் தமிழ்நாடு தொல்லியல் துறையிடமிருந்து இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரவில்லை. 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் நிதியுதவி ஏதும் வழங்கவில்லை. பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-ன் படி அகழாய்வுக்கு இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் அனுமதி அளிக்கிறது. மாநில தொல்லியல் துறை உட்பட எந்தவொரு முகமையும் தேவையெனக் கோரும்பொழுது தொழில்நுட்ப உதவியும் அளிக்கப்படுகிறது.
இத்தகவலை மக்களவையில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
***
(Release ID: 2146394)
AD/TS/IR/AG/DL
(Release ID: 2146525)