ஜல்சக்தி அமைச்சகம்
ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் மத்திய பொறுப்பு அதிகாரிகள் ஆய்வு
Posted On:
21 JUL 2025 4:00PM by PIB Chennai
ஜல்ஜீவன் இயக்கத்தின் வெற்றிகரமான அமலாக்கத்தை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலம் ஆய்வுக் கூட்டங்களையும் மத்திய ஜல்ஜீவன் அமைச்சகம் நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மத்திய பணியாளர் நல மற்றும் பயிற்சித்துறை தேர்வு செய்த மாவட்டங்களுக்கு ஜல்ஜீவன் இயக்கத் திட்டத்தை கள ஆய்வு செய்வதற்காக மத்திய பொறுப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. இந்த அதிகாரிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காரைக்கால் மாவட்டத்திலும் இந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தகவலை இந்த மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய ஜல்சக்தி இணையமைச்சர் திரு வி சோமண்ணா தெரிவித்தார்.
----
(Release ID 2146365)
AD/TS/SMB/KPG/KR
(Release ID: 2146461)