இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
போதைப் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்குடன் நடைபெறுகிறது இந்த வாரத்திற்கான ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு - வாரணாசியில் நாளை பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா
Posted On:
19 JUL 2025 3:09PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா நாளை (2025 ஜூலை 20) வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து நாடு தழுவிய உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் (ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்) நிகழ்வில் பங்கேற்கிறார். இந்த வாரம் இந்த நிகழ்வு போதைப் பொருள் பழக்கத்தை ஒழித்தல் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், கேந்திரிய வித்யாலயா சங்கம், இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு கவுன்சில், டிஏவி கல்லூரி மேலாண்மைக் குழு, நவோதயா வித்யாலயா சமிதி உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து நாடு முழுவதும் 6000 இடங்களில் நாளை இந்த உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
புது தில்லியில், இந்த நிகழ்வு காலை 7 மணிக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் இருந்து தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (NCR) பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளுடன் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்படும்.
2024 டிசம்பரில் மத்திய விளையாட்டு அமைச்சரால் தொடங்கப்பட்ட இது இப்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஏராளமானோரின் பங்கேற்புடன் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் இது ஏற்பாடு செய்யப்படுகிறது.
*****
(Release ID: 2146056)
AD/PLM/SG
(Release ID: 2146070)