வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்திய ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க இரண்டு முக்கிய கண்காட்சிகளில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் பங்கேற்றது
Posted On:
17 JUL 2025 3:15PM by PIB Chennai
இந்திய பொம்மை மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க புதுதில்லியில் டிரேட் கனெக்ட் என்ற மின்தள வர்த்தக ஊக்குவிப்பு நடைவடிக்கையின் கீழ் இரண்டு முக்கிய கண்காட்சிகளில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் பங்கேற்றது. 71-வது இந்திய சர்வதேச ஆடை கண்காட்சி 01.07.2025 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இதை மத்திய ஜவுளி இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா தொடங்கி வைத்தார். இதில் 360 இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.
இதே போல் 16-வது டாய் பிஸ் பொம்மை கண்காட்சி 04.07.2025 முதல் 07.07.2025 வரை புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய பொம்மைகள் சங்கததின் சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் பங்கேற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட இந்திய பொம்மை உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
----
(Release ID: 2145471)
AD/TS/PLM/KPG/DL
(Release ID: 2145615)
Visitor Counter : 3