தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் இணைப்புக்கான சொத்துக்களை மதிப்பிடும் கட்டமைப்பு குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான பயிலரங்கு

Posted On: 17 JUL 2025 4:43PM by PIB Chennai

டிஜிட்டல் இணைப்புக்கான சொத்துக்களை மதிப்பிடும் கட்டமைப்பு குறித்து  அமைச்சகங்களுக்கு இடையேயான பயிலரங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் புதுதில்லியில் இன்று நடத்தியது. இதில்  மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், இந்திய தர நிர்ணய அமைவனம், மத்திய பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களையும் அமைப்புகளையும் சேர்ந்த அதிகாரிகளும் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

உயர்தர அகண்ட அலைவரிசை மற்றும் மொபைல் இணைப்பை உறுதி செய்வதற்கு உள்கட்டமைப்பு சொத்துக்கள் தயாராக உள்ளதை மதிப்பீடு செய்வதையும் பசுமை நடைமுறைகளை பின்பற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. டிஜிட்டல் இணைப்புகளை ஏற்படுத்தும் போது கட்டடங்கள், வணிக வளாகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றுக்குள் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவது டிஜிட்டல் சொத்துக்கள் எனப்படுகிறது.

இந்தப் பயிலரங்கில் பங்கேற்று பேசிய ட்ராய் தலைவர் திரு அனில் குமார் லகோட்டி, வலுவான டிஜிட்டல் இணைப்பு அவசியம் எனவும் அதற்கு தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் வசதியாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார். டிஜிட்டல் இணைப்புகளை ஏற்படுத்தப்படும் போது உள்கட்டமைப்புகளுக்கு இடம் வழங்குபவர்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் இடையே வெளிப்படையான அணுகுமுறை உறுதி செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

----

(Release ID:  2145518)

AD/TS/PLM/KPG/DL


(Release ID: 2145612) Visitor Counter : 3
Read this release in: English , Urdu , Hindi