பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
குழந்தை தத்தெடுப்பின் அனைத்து நிலைகளிலும் தகுதி வாய்ந்த ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய தத்தெடுப்பு மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தல்
प्रविष्टि तिथि:
17 JUL 2025 4:03PM by PIB Chennai
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய தத்தெடுப்பு மேம்பாட்டு ஆணையம், குழந்தை தத்தெடுப்பின் அனைத்து நிலைகளிலும் தகுதி வாய்ந்த ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் விரிவான வழிமுறைகளை வழங்கியுள்ளது.
இந்த முயற்சி வருங்காலத்தில் தத்தெடுக்கும் பெற்றோர், தத்தெடுக்கப்படும் குழந்தைகள், தத்தெடுப்புக்காக குழந்தையை ஒப்படைக்கும் பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு சமூக ஆதரவு கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த வழிமுறைகளின்படி மாநிலம், மாவட்ட அளவில் தகுதிவாய்ந்த ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்று மாநில தத்தெடுப்பு மேம்பாட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2145488
***
AD/TS/GK/AG/DL
(रिलीज़ आईडी: 2145607)
आगंतुक पटल : 9