பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எவரெஸ்ட் மற்றும் கிளிமாஞ்சாரோ சிகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மலையேற்றக் குழுக்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டு

Posted On: 17 JUL 2025 1:21PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று (17.07.2025) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங் எவரெஸ்ட் மற்றும் கிளிமாஞ்சாரோ சிகரங்களுக்கு செல்லும் மலையேற்றக் குழுக்களின் பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

எவரெஸ்ட் பயணத்திற்கு மேற்கு வங்காளம் டார்ஜிலிங்கில் உள்ள இமயமலை மலையேற்ற பயிற்சியகமும் ஜம்மு காஷ்மீரில் உள்ள மலையேற்ற பயிற்சி மற்றும் விளையாட்டு நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. கிளிமாஞ்சாரோ மலையேற்றப் பயணத்திற்கு இமயமலை மலையேற்ற பயிற்சியகம் ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறைச் செயலாளர், இரு மலையேற்றக் குழுவினரின் உறுதிப்பாடு, துணிச்சலை பாராட்டினார். இந்தப் பயணம் இந்தியாவின் மலையேற்றப் பயணத்தின் சிறப்பையும், சாகச விளையாட்டின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். இந்த இரு சிகரங்களிலும் வெற்றிகரமாக ஏறி புதிய இலக்கை நிர்ணயிப்பதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள மலையேற்றத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

----

AD/TS/GK/AG


(Release ID: 2145535) Visitor Counter : 3