வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஒட்டுமொத்த ஏற்றுமதிகள் (வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள்) 2025 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 210.31 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது
Posted On:
15 JUL 2025 4:41PM by PIB Chennai
2025 ஏப்ரல்-ஜூன் காலக்கட்டத்தில் வணிகப் பொருட்கள் மொத்த ஏற்றுமதி மதிப்பு 112.17 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், இது 2024 ஏப்ரல்-ஜூன் காலக்கட்டத்தில் 110.06 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது 1.92% நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.
2025 ஏப்ரல்-ஜூன் காலக்கட்டத்தில் பெட்ரோலியம் அல்லாத பிற பொருட்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 94.77 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், இது 2024 ஏப்ரல்-ஜூன் காலக்கட்டத்தில் 89.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்ததுடன் ஒப்பிடும்போது 5.97% அதிகரிப்பாகும்.
2025 ஜூன் மாதத்தில் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சியின் முக்கிய காரணிகளில் மின்னணு பொருட்கள், மருந்துகள், பொறியியல் பொருட்கள், கடல்சார் பொருட்கள், இறைச்சி, பால் பொருட்கள் உள்ளிட்டவை அடங்கும்.
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 2024 ஜூன் மாதத்தில் 2.82 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் அது 46.93% அதிகரித்து 2025 ஜூன் மாதத்தில் 4.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
மருந்துகளின் ஏற்றுமதி 2024 ஜூன் மாதத்தில் 2.47 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் அது 5.95% அதிகரித்து 2025 ஜூன் மாதத்தில் 2.62 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 2024 ஜூன் மாதத்தில் 9.38 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் அது 1.35% அதிகரித்து 2025 ஜூன் மாதத்தில் 9.50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 2024 ஜூன் மாதத்தில் 0.56 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் அது 2025 ஜூன் மாதத்தில் 13.33% அதிகரித்து 0.63 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
இறைச்சி, பால் பொருட்களின் ஏற்றுமதி 2024 ஜூன் மாதத்தில் 0.31 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் அது 19.70% அதிகரித்து 2025 ஜூன் மாதத்தில் 0.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144870
***
AD/TS/IR/SG/KR
(Release ID: 2144919)
Visitor Counter : 3