புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
ஐ.நா. முகமைகளுடனான ஒத்துழைப்போடு பிராந்திய புள்ளிவிவர உடன்பாடுகளை இந்தியா வலுப்படுத்தியுள்ளது
Posted On:
14 JUL 2025 3:48PM by PIB Chennai
ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவர ஆணையத்தின் செயல் உறுப்பினராக உள்ள புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளுக்கு "மாறிவரும் தரவு சூழல் அமைப்பில் தரவு நெறிமுறைகள், நிர்வாகம் மற்றும் தரம்" என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் புள்ளிவிவர நிறுவனம், ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரப் பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மூன்று நாட்கள் (2025 ஜூலை 14 முதல் 16 வரை) பிராந்திய பயிலரங்கத்தை நடத்துகிறது. இந்தப் பயிலரங்கு, கூட்டு முயற்சி, நெறிமுறை மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள தரவு சூழல் அமைப்புகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இந்தப் பயிலரங்கம், பூட்டான், கம்போடியா, ஃபிஜி, ஜார்ஜியா, இந்தியா, இந்தோனேசியா, கஜகஸ்தான், லாவோஸ், மலேசியா, மாலத்தீவுகள், மங்கோலியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே, வியட்நாம் ஆகிய 16 நாடுகளைச் சேர்ந்த தலைமைப் புள்ளியியல் நிபுணர்கள், தேசியப் புள்ளியியல் அலுவலகங்களின் தலைவர்கள் மற்றும் பிற மூத்த புள்ளியியல் நிபுணர்களை ஒன்றிணைக்கிறது. இந்தப் பயிலரங்கு தேசிய புள்ளியியல் அலுவலகங்களின் தலைவர்களான திரு. சோனம் டென்சின் (பூட்டான்), திரு. கோகிதா டோட்ராட்ஸே (ஜார்ஜியா), திரு. ஐஷாத் ஹாசன் (மாலத்தீவுகள்), திரு. பட்டாவா பட்முங்க் (மங்கோலியா), திரு. சோனி ஹாரி புடியுடோமோ (இந்தோனேசியா), மற்றும் திரு. எலியாஸ் டோஸ் சாண்டோஸ் (திமோர்-லெஸ்டே) ஆகியோரை கௌரவிக்கிறது. அவர்களின் அனுபவங்களும் நுண்ணறிவுகளும் மற்றவர்களுக்கு பயனளிக்கும். அவர்களின் பங்கேற்பு, அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கான பகிரப்பட்ட பிராந்திய அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகிறது.
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசின் பயிற்சி நிறுவனமான தேசிய புள்ளியியல் அமைப்புகள் பயிற்சி அகாடமி, முதல் முறையாக இந்த பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் இந்தியாவின் நீண்டகால பாரம்பரியத்தையும், புள்ளிவிவர திறன் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் அதன் பிராந்திய மற்றும் உலகளாவிய தலைமையையும் பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144518
***
TS/SM/IR/LDN/KR
(Release ID: 2144588)