ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு. ஜே.பி. நட்டாவின் சவுதி அரேபிய பயணம் நிறைவடைந்தது

Posted On: 13 JUL 2025 9:07PM by PIB Chennai

 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, 2025 ஜூலை 11 முதல் 13 வரை தம்மம் மற்றும் ரியாத்திற்கு விஜயம் செய்தார். சவுதி அரேபியாவுக்கான அவரது பயணம், ரசாயனம் மற்றும் உரத் துறையில் இந்தியாவுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. உரத் துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.

 

உரங்கள், பெட்ரோ கெமிக்கல் மற்றும் மருந்துத் துறைகளில் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து சவுதி அரேபிய தொழில் மற்றும் கனிம வள அமைச்சர் மேதகு திரு. பந்தர் பின் இப்ராஹிம் அல் கொராயேஃப் உடன் திரு  ஜே.பி. நட்டா ரியாத்தில் கலந்துரையாடினார்.

 

2025-26 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக மேம்படுத்தப்பட்ட 3.1 மில்லியன் மெட்ரிக் டன் டை அம்மோனியம் பாஸ்பேட் உரங்களை வழங்குவதற்காக, மாடேன் மற்றும் இந்திய நிறுவனங்களான ஐபிஎல், கேஆர்ஐபிஹெச்சிஓ மற்றும் சிஐஎல் ஆகியவற்றுக்கு இடையே நீண்டகால ஒப்பந்தங்கள் அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்தாகின. பரஸ்பர ஒப்புதலுடன் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டது.

 

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து, சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சரும், இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான உத்திசார் கூட்டாண்மை கவுன்சிலின் பொருளாதாரம் மற்றும் முதலீட்டுக் குழுவின் இணைத் தலைவருமான இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் அல் சவுத்துடன், திரு. ஜே.பி. நட்டா இருதரப்பு சந்திப்பையும் நடத்தினார்.

 

சவுதி சுகாதாரத் துறையின் துணை அமைச்சர் மேதகு அப்துல்அஜிஸ் அல்-ருமையையும் திரு. ஜே.பி. நட்டா ரியாத்தில் சந்தித்தார். மருத்துவத் துறை, சுகாதார சேவைகள், மருந்துகள், டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் மற்றும் அறிவுசார்  பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்தச் சூழலில், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சமீபத்திய சவுதி அரேபிய ராஜ்ஜிய வருகையின் போது கையெழுத்திடப்பட்ட சுகாதாரம் குறித்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் குறிப்பிட்டனர்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2144426

 

 

(Release ID: 2144426)

AD/BR/KR

***


(Release ID: 2144497)
Read this release in: English , Urdu , Marathi , Hindi