இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவிக்கும் மனதின் குரல் திறமை வேட்டை சீசன் 5 இன் இறுதிச் சுற்றுப் போட்டிகளை மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே தொடங்கி வைத்தார்.

Posted On: 13 JUL 2025 8:21PM by PIB Chennai

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, திருவனந்தபுரத்தின் ஜோதிஸ் மத்தியப் பள்ளியில் "மனதின் குரல் திறமை வேட்டை சீசன் 5" இன் இறுதிச் சுற்றுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் அதிகாரம் பெற்ற இளைஞர்களால் இயக்கப்படும் வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் நேரடியாக ஒத்துப்போகிறது. குளோபல் கிவர்ஸ் பவுண்டேஷன், கேரளாவின் மேரா யுவ பாரத் உடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, பிரதமரின் 'மனதின் குரல்' ஒலிபரப்புகளிலிருந்து கற்றுக்கொள்ள மாணவர்களை ஊக்குவிப்பதையும், இளைஞர்களிடையே பல்வேறு திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

பல்வேறு திறன்களை சோதிக்க வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான ஈடுபாட்டு போட்டிகளுக்கு மேடை அமைத்து, "மனதின் குரல் திறமை வேட்டை சீசன் 5" 13.07.2025 அன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் இணையமைச்சர் திரு வி. முரளீதரன் தலைமையுரையாற்றினார்.  தொடக்க விழாவின் சிறப்பம்சமாகமத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே, இறுதிச் சுற்றை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

 

கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே, "மனதின் குரல் திறமை வேட்டை' என்பது நமது இளைஞர்கள் நாட்டின் நாடித்துடிப்புடன் இணைவதற்கும், நமது கூட்டு அபிலாஷைகளைப் புரிந்துகொள்வதற்கும், விமர்சன சிந்தனை மற்றும் தகவல் தொடர்பு திறன்களை வளர்ப்பதற்கும் ஒரு சக்திவாய்ந்த தளமாகும். 'மனதின் குரலின்' நுண்ணறிவு செய்திகளில் ஈடுபடுவதன் மூலம், இந்த இளம் மனங்கள் இந்தியாவைப் பற்றி கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், 'வளர்ந்த பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையை இயக்கும் பொறுப்புள்ள மற்றும் தகவலறிந்த குடிமக்களாகவும் வடிவமைக்கப்படுகின்றன" என்று வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2144416

 

 

(Release ID: 2144416)

AD/BR/KR

 

***


(Release ID: 2144494)
Read this release in: English , Urdu , Hindi , Marathi