பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய ஒற்றுமைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதில் தேசிய மாணவர் படை உறுதியாக உள்ளது- பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
प्रविष्टि तिथि:
11 JUL 2025 6:02PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று (11.07.2025) நடைபெற்ற தேசிய மாணவர் படையின் முன்னாள் மாணவர் சங்கத்தின் முதல் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய மாணவர் படை நாட்டின் இளைஞர்களுக்கு சிறந்த தளமாக விளங்குவதாக கூறினார். தேசிய மாணவர் படையின் முன்னாள் மாணவர்கள் இந்தியாவின் வலுவான தூண்கள் என்றும், பல்வேறு துறைகளில் அவர்கள் செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சி இலக்கை விரைவில் அடைய இந்த முன்னாள் மாணவர்களின் வழிகாட்டுதல்களையும் இணைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஒரே இந்தியா உன்னத இந்தியா, தூய்மை இந்தியா இயக்கம் போன்ற பல்வேறு சமூக மேம்பாட்டு சேவை திட்டங்கள் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் தேசிய மாணவர் படையின் முன்னாள் மாணவர் சங்கத்தினரையும் தீவிரமாக இணைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2144071
***
AD/TS/GK/AG/DL
(रिलीज़ आईडी: 2144108)
आगंतुक पटल : 13