பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
குடிமக்களின் திருப்தியை உறுதி செய்யும் வகையில் குறைதீர்ப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும் - டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
09 JUL 2025 4:17PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பொதுமக்களின் குறைதீர்ப்பு நடவடிக்கைகள் குறித்த நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மக்களின் திருப்தியை உறுதி செய்யும் வகையில் குறைதீர்ப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குறைதீர்ப்பு நடவடிக்கைகள் முறையான சீர்திருத்தம் மற்றும் வாழ்வியல் முறைகளை எளிதாக்கும் கருவியாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
"பொதுவான குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வது குறித்து நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை ஏற்பாடு செய்திருந்த தேசிய பயிலரங்கில் உரையாற்றிய அவர், கொள்கைகளை வகுப்பதிலும், நிர்வாக விதிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதிலும் அரசுகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக இதனைக் கருத வேண்டும் என்று அவர் கூறினார்.
நாட்டில் நடைமுறையில் உள்ள குறைதீர்ப்பு செயல் முறைகளின் பரிணாம வளர்ச்சி குறித்த எடுத்துரைத்த அமைச்சர், 2014-ம் ஆண்டில், ஆண்டுதோறும் இரண்டு லட்சம் குறைகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்ததாகக் கூறினார். குறை தீர்ப்பு மனுக்களுக்காக அரசு உருவாக்கிய இணையதளங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். "தற்போது ஆண்டு தோறும் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட குறைகள் தொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இது பொது நம்பிக்கை மற்றும் குறைதீர்ப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளதென்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் நிர்வாகத்திற்கான அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமரின் "அதிகபட்ச நிர்வாகம், குறைந்தபட்ச அரசின் தலையீடு" என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ், மக்களின் வாழ்வியல் முறைகளை எளிமைப்படுத்தும் வகையில் பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை, உரிய நேரத்தில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துதல் போன்ற அம்சங்கள் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று அவர் விவரித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2143413
-----
VL/TS/SV/KPG/DL
(Release ID: 2143500)