தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்து ட்ராய் மதிப்பீடு
Posted On:
09 JUL 2025 10:59AM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் தொலைத்தொடர்பு சேவைக்கான உரிமம் பெற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சேவைகளின் தரம் குறித்த பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீடுகள் மே மாதத்தில் நகர்ப்புறங்கள் நெடுஞ்சாலைகள், ரயில் வழித்தடங்கள் ஆகிய பகுதிகளில் ட்ராய் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். தில்லியில் உள்ள இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ், நகர்ப்புறங்களில் உள்ள முக்கியப் பகுதிகள், பொதுப் போக்குவரத்து மையங்கள், விரைவுச் சாலைகள், போன்ற பல்வேறு பயன்பாட்டு சூழல்களில் மொபைல் சேவைகளின் செயல்திறன் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மே 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, நகர்ப்புறங்களில் 116.6 கி.மீ வரையிலும் நெடுஞ்சாலைகளில் 283.9 கி.மீ தொலைவிற்கும், ரயில்வழித் தடங்களில் 384.8 கி.மீ. வரையிலும் இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 5 முக்கிய நகர்ப்புறப் பகுதிகளிலும் தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனைகளில் 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி போன்ற மொபைல் சேவைகளின் தரம் குறித்தும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உனா மற்றும் மண்டியில் உள்ள நகர்ப்புற பகுதிகள், ரயில் நிலையம், ஐஐடி மண்டி வளாகம், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் தொலைத்தொடர்பு சேவை குறித்த தரப்பரிசோதனைகளும் இதில் அடங்கும்.
இந்தப் பரிசோதனைகளின் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் திரு அனில் குமார் லஹோட்டி, "இந்தியா டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட பொருளாதார நாடாக உருவெடுத்து வருவதால், தொலைத்தொடர்பு சேவைகளின் தரம் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143309
*
VL/TS/SV/KPG/KR
(Release ID: 2143386)