கலாசாரத்துறை அமைச்சகம்
சர்வதேச புத்த சமய கூட்டமைப்பு (ஐபிசி) ஆஷாட பூர்ணிமா – தம்மச்சக்கப்பவட்டனா தினத்தை சாரனாத்தில் ஜூலை 10 அன்று கொண்டாடவுள்ளது
Posted On:
08 JUL 2025 3:08PM by PIB Chennai
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள சர்வதேச புத்த சமய கூட்டமைப்பானது (ஐபிசி) இந்திய மகாபோதி சங்கத்துடன் இணைந்து ஆஷாட பூர்ணிமா – தம்மச்சக்கப்பவட்டனா தினத்தை சாரனாத்தில் 2025 ஜூலை 10 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு கொண்டாடவுள்ளது.
தற்போது சாரனாத் என்று அறியப்படும் ரிசிபடனா மிரிகதயாவில் உள்ள மான் பூங்காவில் புத்த பகவான் தமது ஐந்து சீடர்களுக்கு முதலாவது அறவுரை வழங்கிய தினத்தை, புத்த தம்ம சக்கரத்தின் முதலாவது சுழற்சியை குறிப்பது ஆஷாட பூர்ணிமா ஆகும். இந்த புனிதமான நாள் மழைக்காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இதனை உலகெங்கிலும் உள்ள புத்தமத பிக்குகளும், பிக்குணிகளும் கடைப்பிடிக்கின்றனர்.
ஆஷாட பூர்ணிமா கடைபிடிக்கப்படும் அன்று மாலை நேரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தமேக் ஸ்தூபி அருகே வலம் வருதல், புத்த சமய போதனைகளுடன் தியானம் செய்தல் ஆகியவை நடைபெறும். பிரபல புத்த துறவிகள், அறிஞர்கள், பிரமுகர்கள் ஆகியோரால் மங்கள சரண் ஓதப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143093
***
AD/TS/SMB/AG/KR
(Release ID: 2143145)