தேர்தல் ஆணையம்
பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தின் ஆரம்ப கட்டம் நிறைவடைந்துள்ளது - படிவங்களை அச்சிடுதல், விநியோகித்தல் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது
Posted On:
06 JUL 2025 7:27PM by PIB Chennai
பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் வாக்காளர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டிய பணியின் தொடக்க கட்டம் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது.
24.06.2025 தேதியிட்ட அறிவுறுத்தல்களின்படி இந்தப் பணி நடத்தப்படுகிறது என்றும், அறிவுறுத்தல்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில், கணக்கெடுப்புப் படிவங்கள் பெறப்பட்ட நபர்களின் பெயர்கள் இருக்கும்.
2025 ஜூலை 25-க்கு முன் எந்த நேரத்திலும் வாக்காளர்கள் தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஏதேனும் ஆவணம் குறைபாடுடையதாக இருந்தால், உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனை காலத்தில் பரிசீலனையின் போது, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள வாக்காளர்களிடமிருந்து வாக்காளர் பதிவு அதிகாரிகள் அத்தகைய ஆவணங்களைப் பெறலாம்.
பீகாரில் 2025 ஜூன் 24 நிலவரப்படி பதிவு செய்யப்பட்ட மொத்த 7,89,69,844 (கிட்டத்தட்ட 7.90 கோடி) வாக்காளர்களில் 21.46 சதவீதம் பேரிடம் இருந்து, இன்று வரை கணக்கெடுப்புப் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், அதாவது நேற்று மாலை 6.00 மணி முதல், 65,32,663 கணக்கெடுப்பு படிவங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்கு இன்னும் 19 நாட்கள் உள்ளன.
படிவங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான https://voters.eci.gov.in தளத்திலும், இசிஐஎன்இடி (ECINET)செயலியிலும் உள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட படிவங்களை வாக்காளர்கள் தாங்களே இசிஐஎன்இடி செயலியில் பதிவேற்றலாம்.
இந்த செயல்முறையை சுமுகமாகவும்சரியான நேரத்தில் முடிப்பதற்காக 20,603 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள், தேசிய மாணவர் படையினர், சாரணர் இயக்க உறுப்பினர்கள் உள்பட கிட்டத்தட்ட 4 லட்சம் தன்னார்வலர்கள், இந்த வாக்காளர் பட்டியல் திருத்த செயல்பாட்டில் முதியவர்கள்,மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் போன்றவர்களுக்கு உதவ, களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 1,54,977 வாக்குச்சாவடி நிலையிலான முகவர்களும் இந்த செயல்பாட்டிற்குத் தீவிர ஆதரவை வழங்கி வருகின்றனர்.
******
(Release ID: 2142756)
AD/PLM/RJ
(Release ID: 2142761)