இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே, மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் அன்னையின் பெயரில் மரக் கன்று நடும் இயக்கத்தில் பங்கேற்றார்
Posted On:
05 JUL 2025 5:55PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் உருவான இயக்கமான அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தில், மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தின் பூசாவலில் நடைபெற்ற மரக் கன்று நடும் நிகழ்வுக்கு மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே தலைமை வகித்தார். மகாராஷ்டிரா மாநில அரசின் ஜவுளித்துறை அமைச்சர் திரு சஞ்சய் சவ்கரே, முக்கிய அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
காடு வளர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த அன்னையின் பெயரில் மரக் கன்று நடும் இயக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம், ஜல்கான் மாவட்ட நிர்வாகம், ஜல்கான் பகுதி மை பாரத் தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 2,000 க்கும் மேற்பட்டோர் உள்ளூர் மரக்கன்றுகளை நட்டனர். பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும், மண் அரிப்பைத் தடுக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், வெப்பநிலை உயர்வு போன்ற சுற்றுச்சூழல் சவால்களை எதிர்த்துப் போராடவும் புளி, வேம்பு, நெல்லி போன்ற இன மரக் கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, மரக் கன்று நடுவதன் கலாச்சார, சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மரங்கள் நமது உறவினர்கள் எனவும் இந்த உலகம் நமது வீடு என்றும் அவர் கூறினார். அனைவரும் மரக் கன்றுகளை நட்டு, அவற்றை தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே வலியுறுத்தினார்.
*****
(Release ID: 2142507)
AD/TS/PLM/SG
(Release ID: 2142536)