இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இந்திய விளையாட்டுத் திறன்கள் உலக அளவில் பிரகாசிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது - மத்திய விளையாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே
இடுகை இடப்பட்ட நாள்:
04 JUL 2025 5:08PM by PIB Chennai
மத்திய விளையாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே, இன்று (04.07.2025) துவாரகாவில் உள்ள யஷோபூமி, இந்திய சர்வதேச மாநாடு, கண்காட்சி மையத்தில் நடைபெற்ற மின் விளையாட்டு போட்டி ஒன்றில் பங்கேற்றார். ஜூலை 4 முதல் 6 வரை நடைபெறும் மூன்று நாள் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் இந்தியாவின் 16 சிறந்த தொழில்முறை அணிகள் இதில் பங்கேற்பதாக கூறினார். மின் விளையாட்டுகளுக்கான அரசின் அங்கீகாரம் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்று அவர் கூறினார்.
மின் விளையாட்டுகளுக்கும் பாரம்பரிய விளைாயாட்டுகளுக்கான இடையேயான ஒற்றுமைகளை அவர் எடுத்துரைத்தார். இரண்டும் ஒழுக்கம், மன உறுதி ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். "பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக திருமதி ரக்ஷா நிகில் கட்சே கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2142230
******
AD/TS/PLM/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2142321)
வருகையாளர் எண்ணிக்கை : 30