விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீநகர் ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் பங்கேற்பு

Posted On: 04 JUL 2025 3:41PM by PIB Chennai

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை  வழங்கினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், துணை நிலை ஆளுநருமான திரு மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா, அமைச்சர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங், இந்தியாவின் மணிமகுடம் ஜம்மு & காஷ்மீர் என்றார்.  விவசாயம், கிராமப்புற மேம்பாடு குறித்து முதலமைச்சருடன் விரிவான  ஆலோசனை நடத்தியதாகவும், ஜம்மு & காஷ்மீரின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது குறித்து விவாதித்ததாகவும் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப உறுதியாக உள்ளதாகவும், அதற்காக, வளமான ஜம்மு & காஷ்மீரும், அதிகாரம் பெற்ற அதன் விவசாயிகளும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த இலக்கை அடைய நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், விரைவில் சிறந்த பல்கலைக்கழகமாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தப் பல்கலைக்கழகம் ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களை மட்டுமல்ல, இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், வெளிநாட்டு மாணவர்களையும்  வரவேற்பதாகவும், இதன் மூலம் இந்தப் பல்கலைக்கழகம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2142182

***

AD/TS/GK/AG/SG/DL


(Release ID: 2142304) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi