இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
50,000 பேர் பங்கேற்புடன் ஜூலை 6 அன்று நடைபெறும் மிதிவண்டியில் உடல் தகுதி இந்தியா ஞாயிறுகளின் 30-வது நிகழ்வுக்கு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தலைமையேற்கின்றன
Posted On:
04 JUL 2025 1:48PM by PIB Chennai
குடியிருப்போர் நலச்சங்கங்களின் பங்கேற்புடன் ஜூலை 6 அன்று நாடு முழுவதும் 6,000 இடங்களில் மிதிவண்டியில் உடல் தகுதி இந்தியா ஞாயிறுகளின் 30-வது நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு நாள் நிகழ்வில் மாசுபாடற்ற மற்றும் உடல் பருமன் இல்லாத இந்தியாவை உருவாக்கும் ஆரோக்கியத்திற்காக நாடு முழுவதும் 50,000-க்கும் அதிகமானோர் மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். 2024 டிசம்பரில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்த இந்த இயக்கத்தில் ஒவ்வொரு வாரமும் நாடு முழுவதும் 50,000-க்கும் அதிகமானோர் பங்கேற்கிறார்கள்.
தற்போது 30-வது நிகழ்வு ஞாயிறன்று காலை 7 மணிக்கு மேஜர் தியான்சந்த் தேசிய விளையாட்டரங்கில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்படும். இந்த மிதிவண்டிப் பயணிகள் இந்தியா கேட், விஜய் சவுக் வழியாக மீண்டும் மேஜர் தியான்சந்த் தேசிய விளையாட்டரங்கிற்கு வந்து சேர்வார்கள்.
நாடு முழவதும் நீடிக்கத்தக்க இயற்கை வளத்தை மேம்படுத்துவது உள்ளூர் சமூகங்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்துவது ஆகியவை குடியிருப்போர் நலச்சங்கங்களின் நோக்கமாகும். அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின் படி, 5 முதல் 6 லட்சம் வரையிலான குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஆரோக்கியமான, சிறந்த வாழ்க்கை முறையை மேற்கொள்வது பற்றி விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்கின்றன. இந்த சங்கங்கள் நாள்தோறும் மிதிவண்டி ஓட்டுதல், யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றில் குடியிருப்போரை ஊக்கப்படுத்துகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2142120
-----
AD/TS/SMB/KPG/SG/DL
(Release ID: 2142279)