சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இந்தியாவின் எதிர்கால உள்கட்டமைப்பை உருவாக்குவது என்பது வெறும் குறிக்கோள் அல்ல, அது ஒரு பொறுப்பு – திரு அஜய் தாம்தா
Posted On:
04 JUL 2025 1:36PM by PIB Chennai
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தில்லி ஐஐடி வல்லுநர்கள் குழு, தில்லி திட்டமிடல், கட்டிடக்கலை கல்வி நிறுவனம் மற்றும் தொழில்துறையினருடன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான இணையமைச்சர் திரு அஜய் தாம்தா, கலந்துரையாடினார். இந்தியா உள்கட்டமைப்பின் எதிர்காலம் பாதுகாப்புடன் ஒருங்கிணைந்த, சூழல் உணர்திறன் கொண்ட சாலைத் திட்டமிடலில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் உள்கட்டமைப்பு ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். சாலைப் போக்குவரத்து அமைச்சகம், சாலைகளை அமைப்பது மட்டுமல்லாமல், தொழில்துறை வளர்ச்சி, நகர்ப்புற விரிவாக்கம், டிஜிட்டல் இணைப்பு மற்றும் குடிமக்கள் நல்வாழ்வுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் திரு அஜய் தாம்தா குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து அமைச்சர் திரு தாம்தா தில்லி ஐஐடியைச் சேர்ந்த ஆசிரியர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்களுடன் கலந்துரையாடினார். இந்த கண்டுபிடிப்புகள் பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நிலம் கையகப்படுத்துதலில் உள்ள சவால்கள், நகர்ப்புற போக்குவரத்து நெரிசல், கடைசி மைல் வரை இணைப்பு, செலவு அதிகரிப்பு போன்ற சாலைத் திட்டங்களில் நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2142113
***
AD/TS/GK/AG/SG
(Release ID: 2142179)