பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப்படையின் இரண்டாவது போர் பயிற்சி பாடத்திட்ட பட்டமளிப்பு விழா
Posted On:
04 JUL 2025 12:23PM by PIB Chennai
விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை விமான நிலையத்தில் இரண்டாவது அடிப்படை போர் பயிற்சி பாடத்திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று (03.07.2025) நடைபெற்றது.
இதில் லெப்டினன்ட் அதுல் குமார் துல், துணை லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா ஆகியோர் விமானப்படை உயர் அதிகாரி ரியர் அட்மிரல் ஜனக் பெவ்லியிடமிருந்து மதிப்புமிக்க 'தங்க விங்ஸ்' விருதைப் பெற்றனர்.
இதன் மூலம் கடற்படை விமானப் போக்குவரத்தின் போர் பிரிவில் சேர்க்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை துணை லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா பெற்றுள்ளார். மேலும் பல்வேறு தடைகளைக் கடந்து கடற்படையில் பெண் போர் விமானிகள் பணியாற்றும் புதிய சகாப்தத்தையும் அவர் தொடங்கி வைத்துள்ளார்.
இந்திய கடற்படை ஏற்கனவே கடல்சார் ரோந்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் விமானிகள், பெண் அதிகாரிகளை இணைத்துள்ளது. தற்போது துணை லெப்டினன்ட் ஆஸ்தா பூனியாவையும் போர் விமானப் போக்குவரத்தில் சேர்ப்பது கடற்படை விமானப் போக்குவரத்தில் பாலின சமத்துவம் மற்றும் மகளிர் சக்தியை ஊக்குவிக்கும் இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
***
(Release ID: 2142070)
AD/TS/GK/AG/SG
(Release ID: 2142149)
Visitor Counter : 2