ஜல்சக்தி அமைச்சகம்
குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையும் யுனிசெஃப்-பும் இணைந்து தேசிய கிராமப்புற சுகாதாரப் பயிலரங்கை நடத்தின
Posted On:
02 JUL 2025 4:23PM by PIB Chennai
மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையும் ஐநா-வின் யுனிசெஃப் அமைப்பின் இந்திய பிரிவும் இணைந்து புது தில்லியில் தேசிய கிராமப்புற சுகாதாரப் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்வில் மூத்த அரசு அதிகாரிகள், மாநில திட்ட இயக்குநர்கள், மேம்பாட்டு அமைப்புகள், துறை வல்லுநர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர் பலர் இணைந்து கிராமப்புற தூய்மை இயக்கத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தனர்.
பயிலரங்கத்தின் ஒரு பகுதியாக, துப்புரவு சேவைகள் பாதுகாப்பானதாகவும், உள்ளடக்கியதாகவும் மட்டுமல்லாமல், பருவநிலைக்கு ஏற்றதாகவும், சமமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான படியை பிரதிபலிக்கும் இரண்டு முக்கியமான தொழில்நுட்ப நடைமுறைகள் வெளியிடப்பட்டன.
கழிவு மேலாண்மை, கழிவு நீர் மறுபயன்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றில் உள்ளூர் அமைப்புகளை வழிநடத்த அதிகாரம் அளிக்கும் சுத்தமான மற்றும் பசுமை ஊராட்சி முயற்சியையும் இதில் இடம்பெற்ற அமர்வு வலியுறுத்தியது. 100% கழிவு பிரித்தல், பேரளவில் உரம் தயாரித்தல், சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பான சுகாதாரம் ஆகியவை தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141536
-----
AD/TS/PLM/KPG/KR
(Release ID: 2141594)