பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திட்டம் 17ஏ-ன் கீழ் கட்டப்பட்ட இரண்டாவது இந்திய போர்க்கப்பலான உதயகிரி இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

Posted On: 01 JUL 2025 5:16PM by PIB Chennai

17ஏ திட்டத்தின் கீழ் மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட இரண்டாவது தாக்குதல் போர்க்கப்பல் உதயகிரி, இந்திய கடற்படை வசம் இன்று (01.07.2025) ஒப்படைக்கப்பட்டது

பல்நோக்குத் திறன் கொண்ட இந்த வகை போர்க்கப்பல்கள் இந்தியாவிற்கு எதிரான  கடல்சார் அச்சுறுத்தல்களைக் கையாளும் திறன் கொண்டவையாகும். உதயகிரி கப்பல், முன்னாள் ஐஎன்எஸ் உதயகிரியின் நவீன வடிவமாகும்.

17ஏ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் போர்க்கப்பல்கள் நவீன ஆயுதங்கள் மற்றும் சென்ஸார் அமைப்பு உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளன. உதயகிரி போர்க்கப்பல் கட்டுமான பணி தொடங்கிய நாளிலிருந்து 37 மாதங்களில் நிறைவு பெற்று இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2141259

***

AD/TS/GK/SG/KR/DL


(Release ID: 2141325)
Read this release in: English , Urdu , Marathi , Hindi