பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த, ராணுவத் தலைமைத் தளபதி பூட்டான் பயணம்

Posted On: 30 JUN 2025 3:35PM by PIB Chennai

இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளுக்கு இடையே நீடித்துவரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, பூடான் நாட்டிற்கு 4 நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சக்கை  இந்திய ராணுவ தலைமைத் தளபதி சந்திக்க உள்ளார்.  மேலும், ராயல் பூட்டான் ராணுவத்தின் தலைமை செயல் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பட்டூ ட்ஷெரிங்குடனும் அவர் கலந்துரையாடுகிறார். இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரிகள்இந்திய ராணுவ பயிற்சி குழு, டென்டாக் பயிற்சி திட்ட அதிகாரிகளுடனும் ராணுவ தலைமைத் தளபதி கலந்துரையாடுகிறார்.

அவரது இந்தப் பயணம் இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை பிரதிபலிக்கிறது.

***

(Release ID: 2140768)

AD/TS/GK/LDN/KR


(Release ID: 2140858)