பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூரும் சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாயும், முதலமைச்சர் இல்லத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டனர்

Posted On: 29 JUN 2025 6:21PM by PIB Chennai

சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய் இல்லத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இன்று (29.06.2025) பிரதமர் திரு நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 123வது அத்தியாயத்தைக் கேட்டார். 'மன் கி பாத்' என்பது வெறும் உரையாடல் மட்டுமல்ல எனவும் இது நாட்டின் ஆற்றல், நேர்மறை எண்ணங்கள், பொதுமக்கள் பங்கேற்பு தொடர்பான ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றுக்கு சான்றாகும் என திருமதி சாவித்ரி தாக்கூர் கூறினார்.

இந்த நிகழ்வில், நிரஞ்சன் பீதாதீஷ்வர் ஆச்சார்யா மகாமண்டலேஷ்வர் ஸ்ரீ ஸ்ரீ 1008 டாக்டர் சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், சத்தீஸ்கர் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி லட்சுமி ராஜ்வாடே, மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் டாக்டர் வர்ணிகா சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பின்னர், சத்தீஸ்கர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் செயல்படுத்தப்படும் ராய்ப்பூரில் உள்ள 'அரசு பெண்கள் இல்லத்தை' திருமதி சாவித்ரி தாக்கூர் ஆய்வு செய்தார். இந்த மையம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் சிறுமிகளுக்கு சேவை செய்கிறது. தற்போது 6 முதல் 18 வயது வரையிலான மொத்தம் 52 சிறுமிகள் இங்கு வசிக்கின்றனர். ​​சிறுமிகளின் பராமரிப்பு, கல்வி, பாதுகாப்பு, ஊட்டச்சத்து தொடர்பாக ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய இணையமைச்சர் ஆய்வு செய்ததுடன் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

வன்முறை மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம், ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்கும் ராய்ப்பூரில் உள்ள ஒரு மையத்தையும் (சக்தி சதன்) தாக்கூர்  பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் மற்றும் சேவைகளை அவர் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வில், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி லட்சுமி ராஜ்வாடே மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

*****

(Release ID: 2140612)

AD/TS/PLM/RJ


(Release ID: 2140634)
Read this release in: English , Urdu , Hindi