புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய எரிசக்தி சேமிப்பு புரட்சியை வழிநடத்த இந்தியா தயாராக உள்ளது: மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி

Posted On: 27 JUN 2025 5:58PM by PIB Chennai

பெங்களூருவின் பிடாடி தொழில்துறை பகுதியில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் உற்பத்தி ஆலையை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி திறந்து வைத்தார். தூய்மையான எரிசக்திக்கான வாக்குறுதி, அதிக மின் கட்டமைப்பு மீள்தன்மைக்கான வாக்குறுதி மற்றும் உலகளாவிய எரிசக்தி சேமிப்பு சந்தையில் இந்தியாவின் தலைமைத்துவத்திற்கான வாக்குறுதியாக இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டதை திரு ஜோஷி குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி நிர்ணயித்த 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமில்லா எரிபொருள் திறன் என்ற இலக்கை அடிக்கோடிட்டுக் காட்டும் அதே வேளையில், நமது மின் கட்டமைப்புக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அதிகமாக வருவதால், நம்பகமான சேமிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியமானது என்று திரு ஜோஷி கூறினார். “இன்று நாம் தொடங்கி வைக்கும் திட்டங்கள் மிகவும் முக்கியமானவை. நமது தொலைநோக்குப் பார்வையை யதார்த்தமாக மாற்றுவதற்கு அவை மிக அவசியம். இந்த பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் உற்பத்தி ஆலை 5 ஜிகாவட் அவர்ஸ் ஆண்டு உற்பத்தி திறன் கொண்டது, நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட ஆலைகளில் ஒன்றாகும்”, என்று அமைச்சர் கூறினார்.

இந்திய எரிசக்தி சேமிப்பு கூட்டணியின் கூற்றுப்படி, நாட்டின் எரிசக்தி சேமிப்புத் துறை 2032 ஆம் ஆண்டுக்குள் ₹4.79 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் என்று அமைச்சர் கூறினார். 2032 ஆம் ஆண்டுக்குள் 411.4  ஜிகாவட் அவர்ஸ் (பம்ப் செய்யப்பட்ட சேமிப்புத் திட்டங்களிலிருந்து 175.18 ஜிகாவாட் அவர்ஸ் மற்றும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளிலிருந்து 236.22 ஜிகாவாட் அவர்ஸ்) எரிசக்தி சேமிப்பு அமைப்புகளின் திட்டத் தேவையை மத்திய மின்சார ஆணையம் மதிப்பிடுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140223

 

***

AD/RB/DL


(Release ID: 2140313) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi