கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கடல்சார் துறையில் டிஜிட்டல் செயல்திறனை அதிகரிப்பதற்கான முக்கிய தொழில்நுட்ப முன்முயற்சிகளை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
26 JUN 2025 5:58PM by PIB Chennai
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் கடல்சார் துறையில் செயல்திறனையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க பல முக்கிய தொழில்நுட்ப முயற்சிகளை இன்று தொடங்கி வைத்தார். சாகர் சேது தளத்தின் தொடக்கமும், டிஜிட்டல் சிறப்பு மையத்தை உருவாக்குவதற்கு கணினி மேம்பாட்டு மையத்துடன் இன்று செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்திய கடல்சார் துறை பெரிய டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்றார். சாகர் சேது தளம், டிஜிட்டல் சிறப்பு மைய முன்முயற்சி ஆகியவற்றின் மூலம் செயல்திறன், வெளிப்படைத்தன்மை, நிலைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இது மீண்டும் எடுத்துரைப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். துறைமுகம், சரக்குப் போக்குவரத்து நடவடிக்கைகளை நவீனமயமாக்குவதுடன், பசுமையான தற்சார்பு கடல்சார் பொருளாதாரத்தை நோக்கிய நமது பயணத்தை இது துரிதப்படுத்தும். என்று திரு சர்பானந்த சோனாவால் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139903
----
TS/PLM/KPG/DL
(रिलीज़ आईडी: 2139950)
आगंतुक पटल : 16