இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு மாநிலங்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன - மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே

प्रविष्टि तिथि: 26 JUN 2025 4:46PM by PIB Chennai

வடகிழக்கு மாநிலங்களில் தமது பயணத்தை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே நிறைவு செய்தார். மத்திய அரசின் பூர்வோட்டர் சம்பர்க் சேது எனப்படும் அமைச்சர்களின் மக்கள் தொடர்பு முன்முயற்சியின் ஒரு பகுதியாக  அவர் அங்கு பயணம் மேற்கொண்டார். இது நிர்வாக உறவுகளை ஆழப்படுத்தவும் பிராந்தியம் முழுவதும் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஒரு லட்சியத் திட்டமாகும்.

வடகிழக்குப் பகுதியில் தமது பயணத்தின் போது 26 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் திருமதி கட்சே ஒரு ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்தக் கூட்டம் விவசாயம், சுகாதாரம், கல்வி, மீன்வளம் போன்ற துறைகளில்  அண்மைக்கால முன்னேற்றங்களை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தியது. 

கள அளவிலான பொறுப்புணர்வின் அவசியத்தை இக்கூட்டத்தில் பேசிய இணையமைச்சர் திருமதி கட்சே வலியுறுத்தினார்.  எல்லைப் பகுதிகள், தேயிலைத் தோட்டப்பகுதிகளில் தீவிர ஒருங்கிணைப்பை அவர் வலியுறுத்தினார். இளைஞர்களும் விளையாட்டுகளும் சமூக மேம்பாட்டின் முக்கிய அம்ச     ங்கள் என அவர் குறிப்பிட்டார். விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும்  இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளுக்கும் மத்திய அரசு தொடர்ந்து அதிக ஆதரவு அளிக்கும் என்று திருமதி  ரக்ஷா நிகில் கட்சே உறுதி அளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139852  

---

AD/TS/PLM/KPG/DL


(रिलीज़ आईडी: 2139925) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese